செங்கல்பட்டு அருகே பிரேக் பிடிக்காமல் அரசு பேருந்து விபத்து

செங்கல்பட்டு அருகே, தேனியில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, மழையால் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகேந்திரா சிட்டி அருகே சிக்னலில் நின்றபோது பிரேக் பிடிக்காத பேருந்து, சென்டர் மீடியனில் ஏறி எதிர்திசைக்கு வந்து மரக்கட்டையில் சிக்கி நின்றது. அதிர்ஷ்டவசமாக, பேருந்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள், பெண் காவலர் மற்றும் சாலையைக் கடந்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

தொடர்புடைய செய்தி