திருப்போரூர் புதிய அலுவலக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய மற்றும் பேரூராட்சி பகுதிகள் உள்ளன. திருப்போரூர் பேரூராட்சிக்கு 15 வார்டுகள் உள்ளன. சென்னை ஒட்டியுள்ள பகுதி என்பதால் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அதிக அளவில் பொது மக்கள் இடம்பெயர்கின்றனர். அவ்வாறு இருக்கையில் மக்கள் தொகை இப்பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தற்போது இருக்கும் பேரூராட்சி அலுவலகம் சிறிய அளவில் இருப்பதாலும் அனைத்து வசதிகளும் இருக்கக்கூடிய வளாகமாக அலுவலகம் அமைய வேண்டும் என பேரூராட்சி தலைவர் தேவராஜ் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் திட்ட இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் என அனைவரிடமும் கோரிக்கை வைத்ததின் பேரில் மூலதன மானிய நிதியிலிருந்து ரூபாய் 98 லட்சம் மதிப்பில் புதிய அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து அப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ் தலைமையில் நடைபெற்றது. 

சிறப்பு அழைப்பாளராக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர் நாராயணர் சர்மா, சார் ஆட்சியர் மாலதி ஹெலன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.

தொடர்புடைய செய்தி