குன்றத்தூர் அருகே மணிமங்கலம் அடுத்த கரசங்காலைச் சேர்ந்த 25 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சதிஷ், மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் தாய் கண்டித்ததால் மனமுடைந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இவர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார். தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சதிஷ் குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.