ஸ்ரீபெரும்புதூரில் கஞ்சா விற்ற 5 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் சிறீபெரும்புதூர் அருகே, ஆரணேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக, சிறீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் நேற்று (ஏப்ரல் 15) காலை, ஆரணேரி அரசு பள்ளி அருகே, கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வடமாநில இளைஞரை பிடித்து விசாரித்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து, அவரிடம் நடத்திய சோதனையில், கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது. 

விசாரணையில் அவர், உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த சிந்தூ (27), என்பதும், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அபுஷாகீர் (37) என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, அப்பகுதியில் உள்ள இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து, பால்நல்லூர் பகுதியில் தங்கியிருந்த அபுஷாகீர் (37), மற்றும் அவரது காதலி மம்தாஜ் பாபி (49), பிஷ்வஜித் (30), ஷிபு (24), சிந்தூ (27) ஆகிய ஐந்து பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 1,600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி