தற்போது, விளைநிலங்களில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து, நெல் அறுவடை செய்ய ஏதுவாக உள்ளன. இந்நிலையில், நேற்றுமுதல் விவசாயிகள் அறுவடை மிஷின் வாயிலாக, நெல் அறுவடை பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதுக்குறித்து விவசாயிகள் கூறியதாவது:பெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையால், விளை நிலங்களில் மழைநீர் தேங்கி வந்தது. இதனால், குறித்த நேரத்திற்கு நெற்பயிர் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது, மழைநீர் வடிந்து உள்ளதால், நெல் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு, விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.