செங்கல்பட்டில் பனிமூட்டம் காரணமாக மின்சார ரயில்கள் காலதாமதம்

பனிமூட்டம் காரணமாக செங்கல்பட்டில் இருந்து செல்லும் மின்சார ரயில்கள் 15 நிமிடம் காலதாமதம் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு ஒரு ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. 

செங்கல்பட்டு மாவட்டம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது பனிமூட்டம் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் 15 நிமிடம் காலதாமதமாக செல்கின்றன, சிக்னல்களில் விளக்குகளில் எறிய விடப்படும் வெளிச்சம் பணி மூட்டம் தொலைதூரத்தில் சரியாக தெரியாத காரணத்தினால் மிதமான வேகத்தில் இயக்கப்படுகிறது. இதனால் அனைத்து மின்சார ரயில்களும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை காலதாமதமாக சென்னைக்கு செல்கின்றன. அதேபோல் சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வரும் மின்சார ரயில்களும் காலதாமதமாக வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து ரயில்களும் காலதாமதம் ஆகவே இயக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி