சென்னையில் ரூ. 30 லட்சம் இ - சிகரெட் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான இ - சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாய் நகரில் இருந்து, இரு தினங்களுக்கு முன் சென்னை வந்த விமானத்தில், பயணியரின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஆண் பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் உடைமைகளை பரிசோதித்தனர். இதில், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,400 இ - சிகரெட்டுகள் சிக்கின.

தொடர்புடைய செய்தி