ஆலந்தூரில் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய திமுக அமைச்சர்

செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூவரசம்பட்டு ஊராட்சிக்கு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கான நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் மண்டலம் 12 குழு தலைவர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் தா. மோ. அன்பரசன் மற்றும் ஆட்சியர் ஒன்று சேர்ந்து தேசிய கொடியை ஏற்றிவிட்டு அதனை கவனிக்காமல் கூட வணக்கம் செய்யாமல் சென்றனர். தேசியக் கொடியை ஏற்றிவிட்ட பின்னர் தான் கொடி தலைகீழாக ஏற்றி இருப்பது தெரியவந்தது. 

உடனடியாக அங்கிருந்த ஆசிரியர் பெருமக்கள் கொடியை மீண்டும் கீழே இறக்கி அதனை சரி செய்து கொண்டிருந்தனர். அதற்கிடையில் கொடி பாட்டும் பாடப்பட்டது. கொடிக்கம்பத்தில் கொடி இருக்கும் நேரத்தில் பாட வேண்டிய கொடி பாட்டு ஆசிரியர்கள் கொடியை சரி செய்து கொண்டிருக்கும் போது பாடப்பட்டது. பின்னர் ஒரு வழியாக கொடியை சரிப்படுத்தி பறக்க விட்டனர். அரசு விழாவில் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டிருக்கும்போதும், இவ்வாறு மின்சாரம் இல்லாததும் மற்றும் தேசிய கொடியை தவறுதலாக ஏற்றியதையும் கூட அறியாத மாவட்ட ஆட்சியரின் செயல் அங்கிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி