மாமல்லபுரம்: பணி நீக்கம்; இளம்பெண் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வி. மாத்துாரைச் சேர்ந்த கோவிந்தன் மகள் லோகேஸ்வரி, (21). ஐ.டி.ஐ. , எலக்ட்ரிக்கல் படித்துள்ளார். மாமல்லபுரம் அடுத்த பையனுாரில் தோழிகளுடன் தங்கி, குன்னப்பட்டு ஜப்பான் சிட்டி பகுதி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

நிறுவனம், கடந்த ஆக.,16ம் தேதி, அவரை பணியிலிருந்து நீக்கியது. ஒரு மாதமாக, பிற இடங்களில் வேலைக்காக முயற்சித்தும், வேலை கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் (செப்.,30) சொந்த ஊருக்கு சென்று திரும்பியவர், மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், சம்பவதினத்தன்று மேல்தள குளியலறையில் துாக்குப்போட்டு இறந்தார்.

இதுகுறித்து தோழிகள், மாமல்லபுரம் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி