மதுராந்தகம்: பாக்கம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

மதுராந்தகம் அருகே பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். மதுராந்தகம் அடுத்த பாக்கம் பகுதியில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி ஐந்து கிராமங்களில் வாழும் மக்கள் பாக்கம், தாதம்குப்பம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர். 

இந்த ஏரியில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக ஜிலேபி மீன்கள் 100 கிராம் முதல் ஒரு கிலோ வரை எடை கொண்டவை செத்து மிதக்கின்றன. இரண்டு நாட்களாக மீன்கள் செத்து மிதக்கும் காரணத்தினால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அந்தச் சாலையில் பயணிப்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்கின்றனர். இதனால் தண்ணீரில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பாக்கம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி, உடனடியாக பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி