காஞ்சி: காலி சேருக்கு முன்பு ஆடல் பாடல் நிகழ்ச்சி- வீடியோ

சுற்றுலா பயணிகளை தவறவிட்ட மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சித்துறை நிர்வாகம். ஆடல் பாடல் நிகழ்ச்சி காலி சீருக்கு முன்பாக நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் ஆங்கில புத்தாண்டுக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அப்போது கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாலை மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா விடுதியில் தங்கி இரவு உணவு அருந்திவிட்டு சென்றுவிட்டார். 

அவரை வரவேற்கவும் அவரை கவனிக்க சென்ற தமிழக சுற்றுலாதுறை நிர்வாகம் மாமல்லபுரம் சுற்றுலா விடுதிக்கு தங்க வந்த விருந்தினர்களை நினைக்க மறந்துவிட்டது. ஆதலால் சுற்றுலாதுறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சி பார்வையாளர்கள் இல்லாமல் 5 மற்றும் 10 பேருக்கு மட்டுமே நிகழ்ச்சியினர் பாடினர். கவர்னரை வரவேற்ற மாமல்லபுரம் சுற்றுலாத்துறைக்கு சுற்றுலா பயணிகளை வரவேற்க மறந்துவிட்டது. அதனால் சுற்றுலா பயணிகள் இன்றி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் இருக்கைகள் எல்லாம் காலியாக இருந்தன.

தொடர்புடைய செய்தி