அடையாறு மேம்பாலம் கீழ்பகுதியில் சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்த திருவொற்றியூரைச் சேர்ந்த 50 வயது பெண் துப்புரவு பணியாளரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் ஆபாச சைகை காட்டியுள்ளார். ஆத்திரமடைந்த அப்பெண், துடைப்பம் குச்சியால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். கண்காணிப்பு கேமராவில் பதிவான வாகன எண்ணை வைத்து போலீசார் விசாரித்து, ஆந்திராவைச் சேர்ந்த பச்சு சாய் தேஜா (25) என்பவரை கைது செய்தனர்.