சென்னை: ரவுடிகள் அட்டகாசம்: சாலையில் நின்ற மூவருக்கு வெட்டு

திருவொற்றியூர், சார்லஸ் நகரில் ரவுடியாக வலம் வரும் மணி, 24, தனது கூட்டாளிகளான தினேஷ், 28, தினேஷ்குமார், 25, ராஜேஷ், 23 ஆகியோருடன் மது போதையில் பட்டாக்கத்தியுடன் அட்டகாசம் செய்துள்ளார். சாலையில் நின்ற தியாகு, 26 என்பவரை இடித்து, அவர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த கும்பல் அவரை கத்தியால் வெட்டியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தியாகுவின் தம்பி மதன், 22, மற்றும் தாய் ரமணி, 47 ஆகியோரையும் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி