மதுராந்தகம் அருகே அரசு பள்ளி நூறாண்டு நிறைவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி நூறாண்டு நிறைவு பெற்றதை ஒட்டி அந்தப் பள்ளியில் பள்ளி மாணவர்களின் கண்கவர் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் மேடையில் சிறப்பாக அரங்கேற்றப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் சேமிப்பதன் அத்தியாவசியம் உணர்த்தும் வகையில் நாடக வடிவில் வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.