அவ்வழியே, சென்னை நோக்கி சென்ற, தடம் எண்: 76பி வழித்தட அரசு பேருந்து, எதிர்பாராத விதமாக மாருதி ஸ்விப்ட் கார் மீது மோதியது. பேருந்து மோதிய வேகத்தில், முன்னால் நின்றிருந்த சரக்கு வேன் மீது 'ஸ்விப்ட் கார்' மோதியது. ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் மோதிக்கொண்டதால், சரக்கு வேன் சாலையிலேயே கவிழ்ந்தது.
ஸ்விப்ட் காரின் முன், பின் என இருபக்கமும் சேதமானது. அரசு பேருந்தின் முன்பக்க வலதுபுறம் சேதமானது. இந்த விபத்தில், பேருந்து மற்றும் காரில் இருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. சரக்கு வாகனத்தின் ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. காஞ்சி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். காயமடைந்த வேன் ஓட்டுனர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து, தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.