காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மின்கம்பம் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த நான்கு பேர் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.