ஸ்ரீபெரும்புதூரில் வேட்பாளர் செல்வப்பெருந்தகை பிரச்சாரம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, கூட்டணி கட்சியினருடன் இணைந்து சிறுமாங்காடு, குன்னம், எச்சூர், பண்ருட்டி, மாத்தூர், வல்லகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சார வாகனத்தின் மூலம் பொதுமக்களை சந்தித்து, திமுக அரசின் கடந்த ஐந்தாண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி ஆதரவு கோரினார். இவருடன் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் மேனகா தேவி கோமகம், தெற்கு ஒன்றிய செயலாளர் நா. கோபல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி