காஞ்சிபுரம்: கால்வாய் ஆக்கிரமிப்பு; விவசாயம் கேள்விக்குறி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே கருவேப்பம்பூண்டி கிராமத்தில் உள்ள பாசன கால்வாய் முட்புதர்கள் மற்றும் செடிகளால் மறைக்கப்பட்டு விவசாய சாகுபடிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், சாலை ஓரத்தில் பாதுகாப்பு தடுப்புகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. இதனால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி