இதுகுறித்து, அவர் கூறியதாவது: வட இந்திய பகுதியில் மட்டுமே கிடைக்கக்கூடிய புத்த மத சின்னம், முதல் முறையாக செங்கல்பட்டு, படாளம் அருகில் பாலாற்றில் கிடைத்தது. அப்பகுதி நாணயங்களிலும், இச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முத்திரை மோதிரமும் கிடைத்தது. அவை செம்பில் செய்யப்பட்டவை. மேலும், சங்க காலத்தைச் சேர்ந்த 45 செ.மீ. நீளம், 23 செ.மீ. அகலம், 7.5 செ.மீ. தடிமன் கொண்ட செங்கல் கிடைத்துள்ளது. அக்காலத்தில் கோட்டை, கோட்டைச்சுவர் இப்பகுதியில் இருந்திருக்கலாம். மண்ணால் செய்யப்பட்ட புகை பிடிப்பான், ஈயத்தாலான காதணி, செம்பு அஞ்சணக்கோல் ஆகியவையும் கிடைத்துள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி