வண்டலூர்: மண்வெட்டியால் உடைத்து ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

வண்டலூர் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் உள்ள இந்தியா நம்பர் ஒன் ஏ.டி.எம் மையத்தில், நேற்று அதிகாலை பணம் எடுப்பதுபோல் வந்த மர்ம நபர்கள், மண்வெட்டி மற்றும் கற்கள் மூலம் இயந்திரத்தை உடைக்க முயன்றனர். அப்போது அபாய எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் அச்சமடைந்த கொள்ளையர்கள், பயன்படுத்திய பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். அலாரம் மூலம் வங்கி நிர்வாகத்திற்கு தகவல் சென்றதையடுத்து, ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஏ.டி.எம் மையத்தில் சோதனை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி