கூடுவாஞ்சேரியில் இடிந்து விழும் நிலையில் பயணியர் நிழற்குடை

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 20,000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கூடுவாஞ்சேரி பகுதியில் இருந்து சென்னையில் பணிபுரியும் ஏராளமானோர், கல்லூரி செல்வதற்கும், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களும் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி தாம்பரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு செல்வது வழக்கம். 

இந்த பேருந்து நிழற்குடை பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால், இந்த கட்டிடத்தில் பல்வேறு இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு, பல்வேறு இடங்களில் சேதம் அடைந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. எனவே இந்த பேருந்து நிறுத்தத்தை உடனடியாக அகற்றி விட்டு, புதிய பேருந்து நிறுத்தத்தை அமைத்து பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தொடர்புடைய செய்தி