பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், சிட்லப்பாக்கம், திருநீர்மலை பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மெட்ரோ வாயிலாக குடிநீர் பெறப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. மேலும் புதியதாக உருவான இணைப்பு இல்லாத பகுதிகள், குழாய் உடைப்பு ஏற்படும் பகுதிகளில், லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சொந்தமாக லாரிகள் இல்லாததால், வாடகை லாரி வாயிலாக குடிநீர் வினியோகம் செய்கின்றனர்.
இதற்காக, ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவாகிறது. இதை தடுக்கும் பொருட்டு, மாநகராட்சி லாரிகள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, 10 கோடி ரூபாய் செலவில், நான்கு டேங்கர் லாரிகள் வாங்கப்பட்டுள்ளன.