தாம்பரம்: புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 15 பேர் கைது

தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், பள்ளிக்கரணை போலீசார் மே 15 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் சோதனையிட்டனர். அப்போது, தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 15 கடைக்காரர்களை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், மாலை நேரங்களில் பொது இடங்களில் மது அருந்தியவர்களையும் எச்சரித்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி