செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் கிரிவலப் பாதையில் நடைபயிற்சி சென்ற 25 வயது பவித்ரா என்பவரிடம், முகமூடி அணிந்த நபர் ஒருவர் 6 கிராம் தங்கச் செயினை பறித்துச் சென்றார். இது குறித்து திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறித்த மர்ம நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.