மேடவாக்கத்தில் பூட்டிய வீட்டுக்குள் பெண் உயிரிழப்பு

பெரும்பாக்கம், மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், 5-வது பிளாக், 21-வது வீட்டில், பெங்களூருவை சேர்ந்த பைசல் பிஸ்வாஸ் (37) மற்றும் அவரது மனைவி சோனாலி பிஸ்வாஸ் (24) இருவரும் வாடகைக்கு வசித்து வந்தனர். இந்நிலையில், டிசம்பர் 30 இரவு 9: 00 மணிக்கு, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, பைசல், வீட்டின் வெளியே தாழ்ப்பாள் போட்டுவிட்டு, வெளியே சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து, பக்கத்து வீட்டில் உள்ள ஒரு பெண்ணிடம் மொபைல் போனில் பேசி, 'என் மனைவி என்ன செய்கிறார் என்று பாருங்கள்' என கூறியிருக்கிறார். இதையடுத்து, அந்தப் பெண், பைசல் வீட்டிற்கு சென்று சோனாலியை அழைத்தபோது, வெகு நேரமாக கதவு திறக்கப்படவில்லை. இது குறித்து அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவல்படி, சம்பவ இடத்திற்கு சென்ற பெரும்பாக்கம் போலீசார், வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, சோனாலி பிஸ்வாஸ் இறந்த நிலையில் கிடந்துள்ளார். பின், சோனாலியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கணவர் பைசலை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி