இதையடுத்து, ஊராட்சி கிராம சேவை மையத்தில் உள்ள சிறு அறையில், அங்கன்வாடி மையம் தற்போது செயல்பட்டு வருகிறது. இங்கு, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், குழந்தைகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: குண்டுபெரும்பேடு ஊராட்சியில், மஹாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், 14 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆடி கூழ் திருவிழா: தமிழர்களின் பாரம்பரிய நோய் எதிர்ப்பு அறிவியல்