காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (S.I.R)ஐ கண்டித்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நவம்பர் 11 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. திமுக தலைமை தீர்மானக்குழு செயலாளர் வைத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் ரவீந்திரநாத் ஆகியோர் உரையாற்றினர். எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.