கடப்பாக்கம் அருகே லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கடப்பாக்கம் அருகே கோட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்த அமித் குமார் இவர் வீட்டுமனை பட்டா மாற்றத்திற்காக கோட்டைக்காடு கிராம அலுவலர் சுதாவிடம் கேட்டுள்ளார். பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் பட்டா மாற்றம் செய்து தருவதாக கூறியுள்ளார். இதனை அடுத்து அமித் குமார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவித்துள்ளார். 

லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய எட்டாயிரம் ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்த போது மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் சரவணன், ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி