செய்யூரில் குட்கா கடத்திய இருவர் கைது

மதுராந்தகம் அருகே காவல்துறை வாகன சோதனையின் போது அரசால் தடை செய்யப்பட்ட 50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா கடத்தியவர் இருவர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் செய்யூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செய்யூர் சித்தாமூர் செல்லும் சாலையில் நல்லூர் கிராமம் ஜங்ஷன் இடத்தில் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது, அந்த வழியாகச் சென்ற டாடா மேஜிக் வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது, வாகனத்தில் சுமார் 50,000 மதிப்புடைய அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்களை கள்ளத்தனமாக கடைகளுக்கு விற்பனை செய்ய எடுத்து வந்துள்ளனர் என தெரிய வந்தது. மேலும் குட்கா கடத்திய வரை விசாரணை செய்ததில், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் செய்யூர் பகுதி சேர்ந்த அந்தோணி செல்வராஜ் என தெரியவந்தது. பின்பு அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து குட்கா பொருட்களையும் ஏற்றி வந்த டாடா மேஜிக் வாகனத்தையும் பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி