கார்நாடக மாநிலம், ஓசூர் வனப்பகுதியில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி ஆண் சடலம் கிடந்ததை ஓசூர் போலீசார் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த நபர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அழகுராஜா, 32 என்பதும், தாம்பரத்தில் தங்கி நெய் வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது. அழகுராஜாவுக்கும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதையடுத்து முருகேசனை, ஓசூர் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அழகுராஜாவுடன் இருந்த முன் விரோதத்தால், அவரை திட்டமிட்டு மறைமலைநகர் அருகில் உள்ள தென்மேல்பாக்கம் வனப்பகுதியில் வைத்துக் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கை மறைமலைநகர் போலீசாரிடம் ஓசூர் போலீசார் ஒப்படைத்தனர்.