வீட்டிற்கு வந்த மாணவி, இதுகுறித்து, தன் தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் (ஜூன் 10) புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த அஜித் (22) என்பவரும், 10ம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவரும், 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவரும் சேர்ந்து, கூட்டாக, மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மூன்று பேரையும், நேற்று (ஜூன் 11) கைது செய்தனர். மூவரிடமும் வாக்குமூலம் பெற்ற போலீசார், இரு மாணவர்களையும், செங்கல்பட்டு சிறுவர் காப்பகத்தில் சேர்த்தனர். அஜித்தை, வேலூர் சிறையில் அடைத்தனர்.