இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், கோவிலில் உள்ள 10 உண்டியல்கள் திறந்து நேற்று காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 29,36,841 ரூபாய் பணம், 70 கிராம் தங்கம், 1,900 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. கோவில் வரலாற்றில் முதல் முறையாக, அதிகளவிலான காணிக்கை பெறப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், கோவில் ஆய்வர் திலகவதி, கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் நகரம்
கோனேரிகுப்பம் கழிவுநீர் தேக்கம்: மக்கள் அவதி, அதிகாரிகள் நடவடிக்கை கோரிக்கை