செங்கை: கன்டெய்னர் - டாரஸ் மோதி விபத்து துரிதமாக செயல்பட்ட போலீசார்

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, தாம்பரம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி திடீரென பிரேக் அடித்ததால், பின்னால் வந்த டாரஸ் லாரி மோதி விபத்துக்குள்ளானது. கண்டெய்னர் லாரி ஓட்டுநர் தப்பிச் சென்றார். விபத்தில் டாரஸ் லாரியின் கண்ணாடிகள் நொறுங்கின. இதைக் கண்ட போக்குவரத்து போலீசார், இரண்டு பொக்லைன் இயந்திரங்களை வரவழைத்து, பழுதான டாரஸ் லாரியை சாலை ஓரமாக நகர்த்தி, பெரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்தனர். போலீசாரின் துரித நடவடிக்கையை வாகன ஓட்டிகள் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி