இதில், 6 ஏக்கர் இடத்தில், 500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்காக, நேற்று முன்தினம் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அளவீடு செய்யும் பணி மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நேற்று(செப்.30) காலை 8: 00 மணிக்கு, மேலக்கோட்டையூர் குடியிருப்பு கட்ட அளவீடு செய்த அதே பகுதியில், ராஜிவ்காந்தி நகர், போலீஸ் குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், இத்திட்டத்தை கைவிடக்கோரி போராட்டம் செய்தனர்.