அதே பகுதியில், புதரும் வளர்ந்து வெயிலில் காய்ந்திருந்தன. நேற்று பிற்பகல் 2: 00 மணிக்கு, புதரில் தீப்பற்றி, அப்பகுதி முழுதும் பரவியது. பனை மரங்களிலும் தீ பரவி, 150க்கும் மேற்பட்ட மரங்கள் கருகின. புதுச்சேரி சாலையில் புகை பரவி, வாகனத்தில் சென்றவர்கள் திணறினர்.
கல்பாக்கம், மத்திய தொழிலக பாதுகாப்பு படையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், மாநில தீயணைப்பு வீரர்கள், அரைமணி நேரத்திற்கும் மேல் தண்ணீரை பீய்ச்சி, மேலும் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர்.