சென்னை, சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பாலவாக்கம் 183வது வார்டில் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி புதிய அலுவலகம், ரேஷன் கடை, விஏஓ அலுவலகம், ஆதார் சேவை மையம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று (பிப்.15) கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் டாக்டர் தமிழரசி சோமு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.