மேல்மருவத்துார்: இறந்த மகனை பார்க்க சென்ற தாய் விபத்தில் பலி

மேல்மருவத்துார் அருகே மணி (48) என்பவர் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 4) உயிரிழந்தார். இந்த துயரச் செய்தியறிந்து அவரது தாய் அலமேலு (70) நள்ளிரவில் மருத்துவமனைக்குச் செல்ல முயன்றபோது, சென்னை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேல்மருவத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி