புனித தோமையார் மலை ஒன்றியம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மேடவாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், கலைஞர் கருணாநிதி 102வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட ஒன்றிய துணை செயலாளர் லோகேஸ்வரன் ஏற்பாட்டில், 100 எண்ணிக்கையிலான பெஞ்ச், டேபிள் வழங்கப்பட்டது. இதில் அமைச்சர் மா. சுப்ரமணியன், தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மேடவாக்கம் ரவி, ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், சித்தாலப்பாக்கம் ஊராட்சி தலைவர் ரவி, கவுன்சிலர் பாலவாக்கம் விஸ்வநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.