சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ் ஆர் எல் இதயவர்மன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். முகாமில் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஆக்சிஜன் குறைபாடு, கண் பரிசோதனை, இசிஜி எனப்படும் இதய மின்னலை வரைவு பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முகாமில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் அன்புச்செழியன், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வென்பேடு ரமேஷ், ஊராட்சி மன்ற துணை தலைவர் பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்