மதுராந்தகம் நகராட்சி 24 வார்டுகளைக் கொண்டுள்ளது. இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு வியாபாரிகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் வரியை முறையாகச் செலுத்தி வருகின்றனர். அவ்வாறிருந்தும், சிறு குறு வியாபாரிகளுக்கு முன்னறிவிப்பின்றி நகராட்சி வரியை வசூலிக்கச் செல்லும் அதிகாரிகள் தடாலடியாக கடைகளில் வேலை செய்யும் ஊழியர்களை வெளியேற்றி, கடைகளுக்குப் பூட்டுப் போட்டுச் செல்கின்றனர்.
இதனால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரம் ஒதுக்கித் தராததால் வரியைச் செலுத்த அவகாசம் கொடுக்காமல் செயல்படுகின்றனர். ஆகவே, மதுராந்தகம் நகராட்சி நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிறு குறு வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.