புக்கத்துறையில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருநங்கைகளால் கட்டப்பட்ட அழகு முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புக்கத்துறை நடராஜபுரம் திருநங்கைகள் வசித்து வரும் பகுதியில் எழுந்தருளிக்கும் அழகு முத்துமாரியம்மன் கோவில் புறநானிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மக்கள் தொண்டு இயக்க தலைவர் அன்பழகன் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. 

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த திருநங்கைகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி