காஞ்சி: இழப்பீடு மோசடி.. வழக்கறிஞர் கைது

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பத்மநாபன், போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் இழப்பீடு பெற்று மோசடி செய்துள்ளார். சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் இறந்த வாலிபர் பெயரில் ரூ.3 லட்சம், மனுதாரருக்கு சேர வேண்டிய ரூ.10.50 லட்சம், மற்றும் பெண் ஒருவரை ஆள்மாறாட்டம் செய்ய வைத்து ரூ.4 லட்சம் என பல லட்சங்களை சுருட்டியது தெரியவந்துள்ளது. 3 ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணையின் முடிவில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ஜனவரி 8 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி