சோழிங்கநல்லுாரில் இருந்து நாவலூர் நோக்கிச் சென்ற ஐ.டி. நிறுவனத்தின் டெம்போ டிராவலர் வாகனம், ஆவின் அருகே முன்னால் சென்ற லாரி பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த கார், டெம்போ டிராவலர் மற்றும் மற்றொரு லாரி என மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று வாகனங்களும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, ஓட்டுநர்கள் மற்றும் ஐ.டி. ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.