செங்கல்பட்டு: கால்நடைகள் திருட்டு அதிகரிப்பு; போலீசார் ரோந்து வர வேண்டுகோள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் விவசாயத்துடன், பலர் மாடு, வெள்ளாடு, செம்மறி ஆடு வளர்த்து வருகின்றனர். இதில் காயரம்மேடு, சிங்கபெருமாள் கோவில், கொண்டமங்கலம், கருநிலம், கொளத்தூர், பேரமனூர், வில்லியம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில், ஆடுகள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. மேய்ச்சலுக்கு ஆடுகளை மலைகள் மற்றும் அறுவடை முடிந்த வயல்களுக்கு ஓட்டிச் செல்வர். 

இவ்வாறு ஓட்டிச் செல்லும் போது, இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வரும் மர்ம நபர்கள் நோட்டமிட்டு, ஆடு மேய்ப்பவர் அசந்த நேரத்தில், ஆடுகளை திருடிச் செல்கின்றனர். இரவு நேரங்களில், மாடுகளையும் திருடிச் செல்கின்றனர். அவர்கள் வாகனங்களில் செல்வதால், துரத்திப் பிடிக்க முடிவதில்லை. ஆடு, மாடுகள் திருடப்படுவது குறித்து எந்த காவல் நிலையத்திலும் புகார் அளித்தாலும், புகார் பெற்று வழக்கு பதிவு செய்யப்படுவது இல்லை. இதன் காரணமாக பலர், புகார் அளிக்க காவல் நிலையம் செல்வதில்லை. எனவே, இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி