செய்யூர் மதுராந்தகம் பவுஞ்சூர் சூனாம்பேடு வெண்ணாங்குபட்டு கடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு நடந்து செல்கின்றனர். சில மாணவர்கள் குடையுடனும் சில மாணவர்கள் குடையில்லாமல் மழையில் ஓட்டம் பிடித்தும் பள்ளிக்கு விரைந்து செல்வதற்காக ஓடுகின்றனர். மழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிந்தபடியே வாகனங்களை இயக்கி செல்கின்றன. வேலைக்குச் செல்பவர்கள் கல்லூரிக்குச் செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். இந்த மழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்