செங்கல்பட்டு மருத்துவமனையில் இலவச கழிப்பறை.. கட்டாய வசூல்

செங்கல்பட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து ஒரு நாளைக்கு பல்லாயிரம் நோயாளிகள் மட்டுமில்லாமல் பார்வையாளர்களிடம் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் மற்றும் அவரது உதவியாளர்கள், பார்வையாளர்கள் அவசர காலத்திற்கு கழிவறை செல்ல ஏதுவாக மருத்துவமனை நுழைவாயில் அருகிலேயே ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக பிரித்து கட்டணமில்லா கழிப்பறை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டணமில்லா கழிப்பறையில் குறிப்பாக பெண்கள் செல்லும் கழிப்பறைக்கு செல்லும் பெண்களிடம் கட்டாயப்படுத்தி 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பலமுறை மருத்துவமனை நிர்வாகத்திடம் பலர் புகார்கள் அனுப்பி உள்ளனர். இருந்தபோதிலும் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கிரிஸ்டல் என்கிற தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணியாற்றிவரும் பெண் ஊழியர்கள் இந்த வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இலவச கழிவறைக்கு வரும் பெண்களிடம் அநியாயமாக 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டாயமாக வாங்குகிறார்கள். உள்ளே நுழையும் போதே மூக்கை பொத்திக்கொண்டுதான் அனைவரும் செல்கின்றனர். சுகாதாரமில்லாத கட்டணமில்லா கழிவறையில் கட்டாயப்படுத்தி வசூல் செய்யும் நபர்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி