இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 3) நண்பர்களுடன் வந்த இருவரும், சிவராமன் கடைக்கு சென்று, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த அவர், பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்த புகாரின்படி, குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பெருங்களத்தூரை சேர்ந்த ரவி, 27, பம்மலை சேர்ந்த வேலன், 26, அத்தீப், 27, குரோம்பேட்டையை சேர்ந்த சிவகுமார், 26, திருநீர்மலையை சேர்ந்த அருண்குமார், 28, ஆகிய ஐந்து பேரை, நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது