அப்போது கட்சியின் தலைவர் திருமாவளவன் தாமதமாக வந்ததால் நீண்ட நேரமாக நிர்வாகிகள் மண்டபத்தில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட செயலாளர் மேனகா மோகன் திடீரென மூச்சு திணறி மயங்கி விழுந்தார்.
அப்போது அங்கு இருந்த விசிக நிர்வாகிகள் அவரை தூக்கிச் சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மூச்சு திணறி பெண் மாவட்ட செயலாளர் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.