மாமல்லபுரத்தில் குவிந்த இருளர் பழங்குடியின மக்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் மாசி மகம் எனப்படும் மாசி மகத் திருவிழா இங்கு தமிழகத்தில் உள்ள இருளர் பழங்குடியினர் மக்கள் மற்றும் வெளி மாநிலத்தவர், வெளிநாட்டில் உள்ளவர்களும் இந்த கடற்கரைக்கு வந்து நாளை (மார்ச் 13) மாசி மகத் திருவிழாவில் கலந்துகொண்டு மாசி மகத் திருவிழாவை கொண்டாடுவார். 

இருளர் பழங்குடியினர் மக்களின் தெய்வமாக வணங்கப்படும் கன்னியம்மன் கடந்த மாதம் அவர்களிடம் இருந்து கோபித்துக் கொண்டு கடலுக்குச் சென்று விடுவார். அவரை மீண்டும் கடலிலிருந்து வீட்டுக்குக் கொண்டு செல்லும் விழா இந்த மாசி மகத் திருவிழா. கடற்கரையில் மணலில் ஏழு படிகள் அமைத்து அவைக்கு பூ, படம், மாலை, சந்தனம், குங்குமம் வைத்து அனைத்து படிகளிலும் கற்பூரம் எரித்து கண்ணியம்மனை வணங்கி அவர்களது தெய்வத்தை வீட்டுக்கு அழைத்துச் செல்வது இந்த மாசி மகத் திருவிழாவின் சிறப்பு. 

அதற்கான ஏற்பாடுகளை மாமல்லபுரம் நகராட்சி தற்போது அவர்களுக்கென்று கழிவறைகள், குடிநீர், மருத்துவ முகாம் ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக மாசி மகத் திருவிழா எனப்படும் விழாக் குழுவினர் இரவு முழுவதும் விழிப்புணர்வு, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்புடைய செய்தி