பிறகு சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் கடலோர காவல் படை போலீசார் சதுரங்கப்பட்டினம் போலீசார் என இருவரும் இணைந்து மர்ம பொருளை பரிசோதனை செய்தனர். இப்பொருள் குறித்து மீனவர்கள் கூறுகையில் இது சோலாரால் இயங்கக்கூடிய ஒரு ரேடார் கருவி என்றும் இதை தமிழகத்தில் பயன்படுத்துவது இல்லை என்றும் இப்பொருளை இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்துவதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசாரும், கல்பாக்கம் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அணுமின் நிலையம் அருகே மர்ம பொருள் மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்